Home Uncategorized டி.டி.வி. தினகரன் ஆதரவு 19 எம்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா பரிந்துரை செய்துள்ளார்....

டி.டி.வி. தினகரன் ஆதரவு 19 எம்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

27
0
SHARE

சென்னை, ஆக. 25&

.தி.மு..வில் இரு அணிகளாக செயல்பட்டு வந்த ஓ.பி.எஸ்., .பி.எஸ். அணிகள் ஒன்றாக இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் 19 பேர் தமிழக ஆளுனரை சந்தித்து முதல்வரை மாற்றவேண்டும் என்று மனு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவை தலைவர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நேற்று மாலை அரசு கொறடா ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அரசுக்கு எதிராக செயல்படும் டி..ஏழுமலை ( பூந்தமல்லி), வெற்றிவேல் (பெரம்பூர்), கோதண்டபாளி ( திருப்பேரூர்), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்தி (குடியாத்தம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), முருகன் (அரூர்), தங்கதுரை (நிலக்கோட்டை), செந்தில்பாலாஜி (அரசக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), கதிர்காமு (பெரியகுளம்), ஐக்கையன் (கம்பம்), சுப்பிமணியன் (சாத்தூர்), முத்தையா (பரமக்குடி), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), சுந்தரராஜ் (ஒட்டப்பிரடாரம்) ஆகிய 19 .தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 14.2.2017 அன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து எடுத்த முடிவிற்கு எதிராக, எந்தவித தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படாத நிலையில் இந்த 19 சட்டமன்ற

உறுப்பினர்கள்சட்டமன்றக்கட்சித்தலைமைக்கு

எதிராகமுதல்வருக்கு

அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

மேலும் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்கள். இத்தகைய செயல் கட்சிக்கு விரோதமானது. தான்சார்ந்துள்ளகட்சிஉறுப்பினர்பதவியைதானாகவேவிட்டுக்கொடுக்கும்நிலைக்கு

ஆளாக்கப்படுவதால், இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி, மேற்காணும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். இதனைச் சுட்டிக்காட்டி 1986ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு

தகுதியின்மையாக்குதல்)  விதிகளின் பிரிவு 6ன் கீழ் பேரவை தலைவரிடம் மனுவினை அளித்து மேற்கண்ட சட்டமன்ற உறுப்பினர்களை தகுதியின்மையாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளேன்.

தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, .பன்னீர்செல்வம் அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்தபோதும் இதேபோன்ற மனுவை பேரவை தலைவரிடம் மனு வழங்கியுள்ளேன். அப்போது பரீசிலனை செய்வதாக பேரவை தலைவர் தெரிவித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக பேரவை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து முடிவெடுக்க பேரவை தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்றார்.

இதனை தொடர்ந்து பேரவை தலைவர் தனபால், இந்த கடிதத்தின் அடிப்படையில் 19 எம்.எல்..க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்திற்கு ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.