Home தமிழகம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஆர்.கே.நகர் தொகுதி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்அமைச்சர்...

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஆர்.கே.நகர் தொகுதி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

18
0
SHARE

சென்னை, டிச. 14

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை, ..சி. நகர் பகுதியில், .தி.மு.. வேட்பாளர்  மதுசூதனனை,   ஆதரித்து,   அமைச்சர் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன்  தலைமையில், இரட்டைஇலை சின்னத்துக்கு, தீவிரமாக  வாக்கு சேகரித்தனர்.

..சி நகர் மார்க்கெட்டில் துவங்கிய பிரச்சாரம் ராஜிவ் காந்தி நகர், நாகதம்மன் கோவில், சேனியம்மன் கோவில் , அன்னை சத்யா நகர் , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று முடிந்தது. இந்த பிரசாரத்தில், எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேளதாளம் கொட்டி, கொடி தோரணங்களுடன் அ.தி.மு..வினர் ஊர்வலமாக சென்று, இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்தில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;

ஆர்.கே.நகர் தொகுதியில், மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த பகுதியில் 5ஆயிரம்  வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 4 ஆயிரம் வாக்காளர்கள் அ.தி.மு..விற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  .தி.மு.., பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறோம்.256 பூத்களிலும், அமோக வரவேற்பு கிடைக்கிறது

ஸ்டாலின்,  .தி.மு.. டெபாசிட் பெற முடியாது என்று கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து. 45 ஆண்டு காலம், இரட்டை இலை, மக்களுக்கு சேவை செய்துள்ளது இரட்டை இலையின் சேவை மக்களுக்கு தேவை. மானியம் விலையில் ஸ்கூட்டர் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.

அந்த ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் பிறந்த தினமான,  பிப்ரவரி 24ம் தேதி அன்று, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்தே துவங்குவோம் என்றார்.