Home தமிழகம் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் அரியவகை மீன் கரை ஒதுங்கியது

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் அரியவகை மீன் கரை ஒதுங்கியது

30
0
SHARE

தூத்துக்குடி, ஆக. 25&

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் அறியவகை மீன் இறந்து கடலில் ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ளே கடல் பகுதியின் கடைசி பகுதியில் ஒரு அறியவகை மீன் செத்து கரை ஒதுங்கி கிடந்தது. அதனை அங்கிருந்த படகு தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளான சோனை மற்றும் சுடலையாண்டி உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செத்துக்கிடந்த அறியவகை மீனை பார்த்தனர்.

இந்த மீனின் பெயர் அம்மி உருளை இது அறியவகை மீனாகும். செத்து கிடந்த மீன் 4 மீட்டர் கொண்டதாகும். அதனுடைய எடை 1 டன் ஆகும். இது கடலின் நடுப்பகுதியில் தான் உயிர் வாழும். ஆழ்கடல் பகுதியில் கப்பலில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இந்த மீனில் உள்ள துடுப்பு பகுதி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. துடுப்பு பகுதியில் உள்ள நூல் தான் ஆப்ரேசன் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நூல். பின்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்பு பழைய துறைமுகத்திற்கு உள்ளே குழிதோண்டி புதைக்கப்பட்டது.