Home மற்றவை வங்கியில் டெபாசிட் செய்ய உதவுவதாக கூறி டீக்கடை உரிமையாளரிடம் ரூ. 60 ஆயிரம் அபேஸ்...

வங்கியில் டெபாசிட் செய்ய உதவுவதாக கூறி டீக்கடை உரிமையாளரிடம் ரூ. 60 ஆயிரம் அபேஸ் பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது

28
0
SHARE

சென்னை, ஆக. 25& சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வங்கியில் டெபாசிட் செய்வதாக கூறி டீ வியாபாரியிடம் ரூ. 60 ஆயிரத்தை திருடிச் சென்ற பீகார்  வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, முட்டா செட்டி தெருவை சேர்ந்தவர் இம்லால்(21). டீ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி அன்று ஒரிசாவில் வசிக்கும் தன் தாய்க்கு பணம் அனுப்ப ரூ. 60 ஆயிரம் எடுத்துக்கொண்டு, ஜி.ஏ. ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தார். அப்போது, அவருக்கு பணம் எப்படி டெபாசிட் செய்வது தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது, வட மாநில வாலிபர்கள் இருவர், இம்லாலிடம் இந்தியில் பேசி, எதற்காக தயங்கி நிற்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அவர்கள், இந்தியில் பேசியதால், இம்லால் பணம் டெபாசிட் செய்வது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள், பணத்தை நாங்கள் டெபாசிட் செய்து தருவதாக கூறியுள்ளனர். இம்லால், அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். வெகு நேரம் கழித்து வந்த அவர்கள் பணத்தை டெபாசிட் செய்து விட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். சந்தேகமடைந்த இம்லால் வங்கியில், இது தொடர்பாக விசாரித்தபோது, யாரும்அது போன்று டெபாசிட் செய்யவில்லை என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இம்லால், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த பண்டித்குமார்(22), சுரேந்தர்சன்னி(33) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர், திருவள்ளூர், பொன்னேரி, அனுப்பம்பட்டு, கவரை தெருவில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும், இவர்களிடம் ரூபாய் தாள்கள் போல் வெட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளை பேப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இம்லாலிடமும், வெள்ளை தாள் நோட்டுகளை வைத்து தான் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.