Home தலையங்கம் எச்சரிக்கை தேவை…!

எச்சரிக்கை தேவை…!

14
0
SHARE

வசதி படைத்தவர்களின் வாகனமாக இருந்த விமானம் இன்று அனைவரும் பயன்படுத்தும் அளவுக்கு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் சாதாரண பஸ், ரயில்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் போல் விமானத்திலும் இருக்கத்தான் செய்கிறது. தங்கல் படத்தில் அறிமுகமான சாயிரா வம்சி என்ற புதுமுக நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இது மட்டும் இன்றி விமானத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபடுவோருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

பேருந்துகளில் உள்ளது போல் பெண்ணின் அருகே ஒரு பெண் தான் அமர வேண்டும். ஆண்கள் அமரக்கூடாது. இதுபோல் சில மாற்றங்களை செய்தாலே சில பாலியல் சீண்டல்களை தடுக்கலாம். இப்போதே இந்த விவகாலத்தில் தீவிரம் காட்ட வேண்டும். அலட்சியம் காட்டினால் இதுபோன்ற ஒரு விவகாரமும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே அரசு சுதாரிக்க வேண்டும்.

இதேபோல் விமானம் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் தான் தனக்கு தானே பாதுகாப்பு கொடுக்க முடியும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடப்பது தெரிந்தும் பெண்கள் சிலர் எச்சரிக்கையாக இருப்பதில்லை. இதனை பற்றி யோசிக்க வேண்டும்.

இது முதல்முறை என்றால் அது தான் தவறு. இதுபோன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விமானத்திலும் நடந்திருக்கிறது. விமானங்களின் உரிமையாளர்களுக்கும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. ஆனால் அவர்கள் வருவாயை ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பெண்கள் விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்.

இதேபோல் பெண்கள் இரவில் தனியாக நடந்து போகும்போதும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். காவல்துறையினர் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். நமது பாதுகாப்பை நாமும் உறுதி செய்துகொள்ள வேண்டும். தற்காப்பு கலைகளும் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாக கருதலாம்.