Home சுடச்சுட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்விற்கு 13,242 பேர் அழைப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்விற்கு 13,242 பேர் அழைப்பு

27
0
SHARE

சென்னை, ஆக.25&  தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு முதல்கட்ட கலந்தாய்விற்கு 13,242 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் செயலாளர் செல்வராஜன் கூறும்போது, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று முதல் துவங்கியது. சென்னை ஒமந்தூரார்  பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் நேற்று சிறப்பு பிரிவினர்கள் அழைக்கப்பட்டனர்.

மாற்றுத்திறானாளிகள் பிரிவில் உள்ள 122 இடங்களுக்கு 58 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் தகுதியான 20 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல் விளையாட்டு பிரிவினருக்கான 3 இடங்களுக்கு 447 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் அண்ணாப் பல்கலைக் கழகம் அளித்த பட்டியலில் உள்ள முதல் 10 மாணவர்களில், 6 மாணவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றனர். அவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 1 இடமும் உள்ளது. அதற்காக 513 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் தகுதியான 471 பேரில் 60 மாணவர்கள் நேற்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான 6 இடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.

மீதமுள்ள இடங்கள் பொதுக் கலந்தாய்விற்கு கொண்டுச் செல்லப்படும்.

மேலும் இன்று துவங்கும் முதல்கட்ட பொதுக் கலந்தாய்வில் 25 ந் தேதி 1,209 மாணவர்களும், 26 ந் தேதி 1,464 மாணவர்களும், 27 ந் தேதி 1,596 மாணவர்களும், 28 ந் தேதி 2,989 மாணவர்களும், 29 ந் தேதி 4,817 மாணவர்களும், 30 ந் தேதி 1081 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 31 ந் தேதி மருத்துக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.