Home மருத்துவம் அருகம்புல்லை பற்றி அறிவோம்

அருகம்புல்லை பற்றி அறிவோம்

8
0
SHARE

அருகம்புல் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது பிள்ளையார் தான் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் அனைவரும் இந்த புல்லை வாங்கி பிள்ளையாருக்கு சாத்துவோம். ஆனால் அருகம் புல் அதற்கு மட்டும் தான் பயன் படக்கூடியதா இல்லை அதற்கு வேறு பயன்களும் உள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

அருகம்புல் இயற்கை அன்னை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இதை வாங்க நாம் கஷ்டப்பட தேவை இல்லை. இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. என்று கூறினால் அது மிகையாகாது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுத்து நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்அரைக்க கஷ்டமாக இருந்தால் மிக்ஸியைப்பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம் .

அருகம்புல் சாற்றில் வைட்டமின்சத்து அதிகமாக உள்ளது. இதை உட்கொண்டால் உடல் உடனே புத்துணர்வு பெறுகிறது. உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்தஅழுத்தத்தையும்அருகம்புல்சாறுசரிசெய்கிறது

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து எளிதாக விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறதுநரம்புத் தளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளதுநீங்கள் எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் சரி அருகம்புல் சாறை பருகி வரலாம் இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லையே உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லி வந்தனர். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுஅருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.

அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

தீராத வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுபட்டு அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களிருந்து அவர்கள் விடுபடுவார்கள்.

வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும்அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்ஒரு பிடி அருகம்புல், மிளகு 10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும் .

மூலநோயால் கஷ்டப்படுபவர்கள் பலர் அவர்களுக்கான தீர்வும் அருகம்புல்லில் இருக்கிறது அருகம்புல் வேர், ஆவாரம்பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.

அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவின் இதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும் .

அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும் அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.

அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும். நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும் . மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும் சக்தி அருகம் புல்லுக்கு உள்ளது. நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகிய நோய்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும் உடலுக்கு அழகும், வசீகரமும் தரும். உடல் வெப்பமும் தணியும்இத்தனை பலன்களை நீங்களும் பெறவேண்டு என்றால் தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து அருந்துங்கள்.  ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் .

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகி பயன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here