Home இந்தியா ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சி.பி.ஐ. முன்பு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சி.பி.ஐ. முன்பு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

34
0
SHARE

புதுடெல்லி, ஆக. 24& ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் டெல்லியில் சி.பி.ஐ முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என்பது சி.பி.ஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது சி.பி.ஐ.ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது சி.பி.ஐ. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் டெல்லியில் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகத்தான் வேண்டும் என கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.