Home சிறப்புச் செய்திகள் அதிக உப்பு அபாயம்

அதிக உப்பு அபாயம்

49
0
SHARE

மத்திய கால இங்கிலாந்தில் உப்பு ஒரு போகப்பொருளாக இருந்தது. பணக்காரர் வீட்டு உணவுப்பண்டமாகவே இருந்தது. இன்று கூட உலகின் பல பகுதிகளில் இது கிடைப்பதில்லை. வெகு தூரத்தில் உள்ள சமூகத்தாருக்காக சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் ஒட்டக வரிசைகள் உப்பை சுமந்து செல்கின்றன. நாகரீகம் மிக்க நாட்டு மக்கள் இதை உணவுப்பண்டங்களில் நிறையப்பயன் படுத்துகிறார்கள். ஆனால் நாகரீக எல்லைக்குள் வராத மக்கள் அநேகமாக இதை உபயோகிப்பதே இல்லை. தொழுலிலும் விஞ்ஞானத்திலும் மிக முன்னேறிய நாட்டு மக்களிடையே மிகுத்த ரத்த அழுத்த நோய் பலருக்கு இருப்பதற்கும் இப்படி நாகரீக முன்னேற்றம் பெறாத பூர்வ குடிகளிடையே இத்த நோய் அநேகமாக இராததற்கும் உப்பே காரணமாயிருக்கலாம்.

உப்பைப்போல உணவின் ருசியை அதிகப்படுத்துவது வேறு ஏதுவும் இல்லை. வளர்ந்த மனிதன் ஒவ்வொருத்தருக்கும், உப்பு ருசி காரணமாக, சராசரி தினந்தோறும் ஐந்து முதல் பதினைந்து கிராம் வரை எடையுள்ள (ஒன்று முதல் மூன்று டீஸ்பூன்) உப்பை உணுகிறான்.

தேவைக்குஅதிகமானஉப்பைமனிதன்உண்கிறான்என்பதுநன்றாய்த்தெரிகிறது. ஒருவனின் உடலுக்கு நாளன்றுக்குத் தேவைப்படும் உப்பு 2 கிராம் தான் (ஒரு டீஸ்பூன் அளவில் மூன்றில் ஒரு பாகம்) சோடியம் குளோரைடு என்ற விஞ்ஞானப்பெயர் உள்ள உப்பு, உணவின் ஒரு முக்கியமான அம்சம். மனிதனும் சரி, பிராணிகளும் சரி உப்பில்லாமல் வாழமுடியாது. மாமிச உணவு உண்ணும் பிராணிகளுக்குத் தாங்கள் உண்ணும் மாமிசத்திலிருந்தே உப்புக்கிடைத்துவிடுகிறது. ஆனால் சாக பட்சினிகளோ உப்பைத்தேடி வெகு தூரம் பயணம் செய்ய நேரிடுகிறது. உடம்பு உப்பை எப்படி பயன் படுத்துகிறது? உணவோடு சேர்த்து சாப்பிடும் போது, குடல் பகுதியில் அது செரிமானம் ஆகி ரத்தத்தோடு கலந்துவிடுகிறது.

படிப்படியாக திரவத்தில் கரைந்து சுற்றிலும் உள்ள திசுக்களை அடைகிறது. உப்பின் பரவல் உடலில் ஒரே மாதிரி இல்லை. செல்களில் மிகமிகக்குறை வாகத்தான் காண்கிறது. நம் உண்ணும் உப்பில் பெரும் பகுதியைச் சிறுநீர்க்காய்கள் வெளியேற்றி விடுகின்றன. கணிசமாள அளவு வேர்வை மூலம் வெளியேறிவிடுகிறது. முக்கியமாக உஷ்ணம் மிக்க சூழ்நிலையில் தீவிரமாக உழைப்பவர், உழைப்பின் போது தங்கள் குடி தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்வது நல்லது. இது கால் மரத்துப்போவதையும் குரக்கு வலிக்கு உட்படுவதையும் தடுக்கும். இந்த குரக்குவலி அல்லது மரப்புக்குச்சுரங்க வேலையாளர் குரக்குவலி மரப்பு என்பது பெயர்.

உஷ்ணம் மிக்க சுரங்கங்களில் தீவரமாக உழைத்தவர்களிடையே முதல் முதலில் இதைக்கண்டபடியால் இது இந்தப்பெயர் பெற்றது. பல அங்க அவயங்கள் வேலை செய்ய உப்புத்தேவையாகும். இருதயத்தின் ஒழுங்கான வேலைமுறைக்கு இது உதவுகிறது. ரத்தத்தின் கன அளவை ஒரே சீராக வைத்துக்கொள்ளவும் இது பயன்படுகிறது. உப்பில் &முக்கியமாக அதிகமாக உள்ள சோடியத்தின் ஒரு பயன். அதுரத்தத்குலும் திசுக்களிலும் உள்ள திரவ அளவுக் குறையாமல் காப்பதே. ரத்தத்தில் இருக்க வேண்டிய உப்பின் அளவைச் சீராக வைத்திருக்கும் வேலையைச்சிறு நீர்க்காய்கள் சகஜமாக செய்கின்றன.

அளவுக்கு அதிகமான உப்பு உடலுக்குள் புகுந்தால், அந்த அதிகப்படியை அந்த உள்ளுசப்புகள் வெளியேற்றிவிடுகின்றன. உணவில் உப்பு அதிகமாக இருப்பது உயர்ந்த இரத்த அழுத்ததத்துக்  காரணம் என்பது நிருபணமாகி இருக்கிறது. பூதத்துவ ஆராய்ச்சி காரணமாக உணவுப்பொருள்களில் அதிக உயர்ந்த ரத்த அழுத்த நோய் பலரிடம் காண்கிறது. ஜப்பானின் வடக்குப்பிரதேச மக்கள் நிறைய உப்புச்சாப்பிடுகிறார்கள். 15 முதல் 30 கிராம் நாளன்றுக்கு எனவே அங்கே உள்ளமக்கள் பலர் உயர்ந்த ரத்த அழுத்தம் உள்ளவராக இருக்கிறார்கள். இந்த உயர்ந்த ரத்த அழுத்தம், மூளைக்குள் ரத்த பெருக்கு ஏற்பட ஒரு காரணமாகும். எனவே வலிப்பு &பாரிசவாயு இவை ஜப்பானில் மற்ற நாடுகளை விட அதிகப் பேரைத்தாக்குவது தெய்வச்செயல் என்று தள்ளிவிடுவதற்கு உரிய ஒன்றல்ல. மூளையின் ரத்தப் பெருக்கே இந்த நிலைக்கு காரணமாகும். தினந்தோறும் 30 கிராம் உப்புச்சாப்பிடும் ஒருவருடைய சிறு நீர்க்காய்கள், அவரது வாழ் நாளில் அரை டன்னுக்கு மேற்பட்ட உப்பை வெளியேற்ற வேண்டிவரும். ஆரோக்கியத்தைப்பாதிக்க இந்த அளவு உப்பு போதும் குக் தீவுகளில் பாலிஸ் சூனியர்களுள் இரண்டு கூட்டத்தாரிடையே ஒர் ஆராய்ச்சி நடந்தது. ஒரு கூட்டத்தார், அதைச்சேர்த்து கொள்ளாதவர். உப்பு சேர்த்துக்கொள்பவருக்கு உயர்ந்த ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.

பழங்குடிகளுள் ரத்த அழுத்த உயர்வு இல்லாததற்கு காரணம், உப்பு உட்கொள்வது மிகக் குறைவு என்பது தான் இந்த உண்மை நன்றாய் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு கிராமுக்கும் குறைவாக உப்பு உண்போர் இவர்கள்.

அமெரிக்காவைச்சேர்ந்த `புரூக் ஷேவன் நேஷனல் லேபரட்டரியில் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் லூயிடாஹ் என்பவர். வழக்கமாக உப்பு உட்கொள்வதன் சாதகபாதகங்களை ஆராய்ந்தார். இதற்காக அமெரிக்கர் ஆயிரம் பேரை இவர் பரீட்சை செய்தார். உணவில் உப்பே இல்லாமல் சாப்பிடுபவர்களிடையே உயர்ந்த இரத்த அழுத்த நோய், மிகக்குறைவு ருசி பார்த்தபின் உப்பு சேர்த்துக்கொள்பவர்களிடையே முன்னவர்களை விடச் சற்று அதிகம். உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதை நிலையாக கொண்டவர்களிடையே மிக அதிகம் என்பது இவர் கண்ட முடிவு. மற்றோர் ஆராய்ச்சியில் 1346 பேரை பரீட்சை செய்தார். இவர்களை மூன்று கட்டங்களாக பிரித்தார். குறைவாக உப்பை உட்கொள்பவர், நடுத்தரமாக உட்கொள்பவர், அதிகமாக உட்கொள்ளுபவர் என்று. முதல் கூட்டத்தாரிடம் ஒரே ஒரு சதவீதத்தினரிடம் உயர்ந்த ரத்த அழுத்தம் தென்பட்டது. இரண்டாம் கூட்டத்தாரிடையே 6.8 சதவீதம், மூன்றாம் கூட்டத்தாரிடையே 10.5 சதவீதம் உயர்ந்த ரத்த அழுத்த நோயுள்ளவர்களின் சிறுநீரில் அதிக அளவு உப்பு காண்பதை வேறு ஆராய்ச்சியாளர்களும் கண்டார்கள். எனவே உப்பு உட்கொள்ளும் அளவுக்கும் உயர்ந்த ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. உயர்ந்த ரத்த அழுத்தம் உள்ளவர் நிறைய உப்பு சாப்பிடுவதற்கு காரணம் உப்பின் ருசியை அறிவதில் அவர்களுக்குள்ள சக்தி நலிவுற்று போனதாக இருக்கலாம். ஆரோக்கியமுள்ள ஒருவனுக்கு நிறைய உப்பை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது.