Home உலகம் வெலிங்டன் ஏரியின் சீரமைக்கபட்ட கரையில் மீண்டும் விரிசல் பொதுப்பணித்துறைக்கு எம்.எல்.ஏ. கண்டனம்

வெலிங்டன் ஏரியின் சீரமைக்கபட்ட கரையில் மீண்டும் விரிசல் பொதுப்பணித்துறைக்கு எம்.எல்.ஏ. கண்டனம்

13
0
SHARE

திட்டக்குடி, டிச. 7 வெலிங்டன் ஏரியின் கரையில் ஏற்பட்ட விரிசல் பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பார்வையிட்டு பேசும்போது.அரசும் சம்மந்தப்பட்ட துறையும் விரிசல் பகுதிகளை சீர்செய்வதில் காலதாமதம் செய்வதை கடுமையாக கண்டித்தார்.

திட்டக்குடி அருகே  கீழ்செருவாயில்  அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியான வெலிங்டன் ஏரி மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி 1876 ல் கட்டப்பட்டது. இதன் நீர் பிடிப்பு பரப்பு 16.6 சதுர கீலோ மீட்டர் முழு கொள்ளளவு 2580 மில்லியன் கனஅடி நீர் தேக்கத்தின் நீர் மட்டஉயரம் 29.72 அடி இவற்றின் பாசன தலைப்பு மதகுகள் முலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

   இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு கரையின்  ஒருபகுதி முழுமையாக சேதமடைந்ததால் பொதுப்பணித்துறையினர் கரையில் 1600 மீட்டர் முதல் 2400 மீட்டர் வரை உள்ள சேதமடைந்திருந்த கரைபகுதியை 8 கோடி ரூபாயில் சீரமைத்தனர்.  தொடர் நடவடிக்கையாக தற்போது 2016&17 ஆம் ஆண்டில் சுமார் 6 கோடி ரூபாயில் கரை மீணடும் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில்  ஏரியின் கரையும் புதியதாக போடப்பட்ட கரைபகுதியும் இணையும் இடத்தில் சமிப தொடர்மழை காரணமாக சுமார் 1 மீட்டர் ஆழத்திற்கு 3&4 மீட்டர் நீளம் வரை விரிசல் ஏற்பட்டு அமுங்கியது. ஏரியின் கரை பகுதி பிளவுபட்டு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடே ஏற்படுத்தியுள்ளது. இந்த கரை சேதமடைந்து உடைந்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் சேதமடைந்த கரைபகுதியை நேரில் ஆய்வு செய்தார் தொடர்ந்து அவர் பேசும்போது  அரசு கரைகளை சீரமைக்க உரிய நிதி ஒதுக்கியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கரை சீரமைப்புபணிகளை முழுமையாக செய்யவில்லை சேதமடைந்த கரையை முழுமையாக ஆய்வு செய்து எடுக்கபடவேண்டடிய நடவடிக்கைகளை முழுமையாக செய்யாததால் கரை தொடர்ந்து பலவீனம் அடைந்துவருகிறது.

இதுகுறித்து தொழில் நுட்ப ரீதியில் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் ஏரிவளாகத்தில் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் மாவட்ட ஆட்சியர்,பதுப்பணித்துறையின் மேல்மட்ட அதிகாரிகள் இப்பகுதியை நேரில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வற்ப்புறுத்துவோம் என குறிப்பிட்டார்.