Home உலகம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்க ஐ.நா. தூதர் வடகொரியா பயணம் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை...

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்க ஐ.நா. தூதர் வடகொரியா பயணம் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் 

12
0
SHARE

பீஜிங், டிச.7& கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக, .நா. தூதர் வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் முக்கிய தலைவர்களுடன் இதுகுறித்து பேச உள்ளார். எனினும் வடகொரியா அதிபரை சந்திப்பாரா? என்பது குறித்து தெரியவில்லை.

வடகொரியா மீது ஐ.நா பல பொருளாதார தடைகளை விதித்த பின்னும் கடந்த வாரம் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை நீடிக்கிறதுவடகொரியாவுடன் போர் ஏற்பட்டால் அந்நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம்  என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சியை துவங்கின.

5 நாட்கள் நடைபெறும் இந்த போர் பயிற்சியில் 230 போர் விமானங்கள் , 10 ஆயிரம் வீரர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த போர் பயிற்சிக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் வடகொரியாவால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை குறைக்க ஐ.நா சார்பில் அதன் தூதுவராக ஜெப்ரி பெல்ட்மான் வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது அவரது முதல் வடகொரிய பயணமாகும். அதற்காக சீன தலைநகர் பெய்ஜிங்கின் விமானநிலையத்திற்கு நேற்று ஜெப்ரி, வடகொரியா சென்றார். அவர் வடகொரியா சென்றப்பின் வடகொரிய அதிகாரிகளுடன் பரஸ்பர பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்அதேசமயம் ஜெப்ரி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here