Home உலகம் ஹபீஸ் சயீத்துடன் கூட்டணிக்கு தயார் முஷாரப் அறிவிப்பு

ஹபீஸ் சயீத்துடன் கூட்டணிக்கு தயார் முஷாரப் அறிவிப்பு

7
0
SHARE

இஸ்லாமாபாத், டிச.7& பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:&

பாகிஸ்தானில் தற்போது நடந்து கொண்டிருப்பதை பயங்ரவாதம் என கூறக்கூடாது. குறைந்தபட்சம் நாமாவது அப்படி அழைக்காமல் இருக்கவேண்டும். அந்த இயக்கங்கள் பாகிஸ்தான் மக்களுக்காக உழைக்கும் அரசு சாரா அமைப்புகளாகும். அவர்கள் தாலிபன்களுக்கோ, அல் கொய்தாவுக்கோ ஆதரவாக செயல்படவில்லை. அதன்பின் நாம் ஏன் அவர்களை பயங்கரவாதிகள் என உருவகப்படுத்த வேண்டும். தற்போது வரை கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால், கூட்டணியில் அவர்கள் இடம் பெற விரும்பினால், நான் அதை வரவேற்பேன்”, என கூறியுள்ளார்.

முஷரப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் செயல்பட்டுவரும் 23 அரசியல் கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என்கிற மகா கூட்டணியை அமைத்தார். ஆனால், இந்த கூட்டணி நீண்ட காலம் நிடித்திருக்காமல் சில நாட்களிலேயே உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here