Home உலகம் உலகின் பிரபலமான 10 டுவிட்: ஒபாமா இடம் பிடித்தார்

உலகின் பிரபலமான 10 டுவிட்: ஒபாமா இடம் பிடித்தார்

12
0
SHARE

நியுயார்க், டிச.7& உலகின் 10 பிரபலமான டுவிட்டில் ஒபாமாவின் டூவிட் இடம் பெற்று உள்ளதுஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாபாவின் 3 டுவிட்டுகள், டுவிட்டரின் பிரபலமான 10 டுவிட்டுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த செவ்வாய் கிழமை வரை 46 லட்சம் லைக்குகளுடன், ஒபாமாவின் இனவெறிக்கு எதிரான டுவிட் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

அவர் இந்த டுவிட்டில், ”உலகில் யாரும் மற்றவரின் நிறம், மதம் மற்றும் சமூக வேறுபாடுகள் ஆகியவற்றால் பகை உணர்வு கொண்டு பிறப்பதில்லை.” என்ற நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியை பதிவு செய்து இருந்தார்இத்துடன் இன வேறுபாடுடன் உள்ள வெவ்வேறு குழந்தைகள் ஜன்னல் வழியாக ஒபாமாவை எட்டிப் பார்ப்பதுபோல் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.இந்த டுவிட் அதிக லைக்குகள் மட்டுமல்லாமல் அதிக அளவில் மக்களால் ரீடுவீட்டும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த வரிசையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஒரு டுவிட் கூட இடம் பெறவில்லை. இதனை ஒபாமா ஆதரவாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here