Home தமிழகம் சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேலம்மாள் பள்ளியில் நடந்தது

சிறார் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேலம்மாள் பள்ளியில் நடந்தது

40
0
SHARE

சென்னை, டிச. 7& அன்றாட வாழ்வில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்புணர்வு மற்றும் வன்கொடுமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து விழிப்புணர்வு மிகுந்த சமுதாயமாக மாற்றும் முயற்சியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பெண் குழந்தைகள் நாள்தோறும் சந்தித்து வரும் வன்கொடுமைகளும் அவற்றிற்குரிய காரணங்களும், பாதுகாப்பற்ற சமுதாயச் சூழலில் மாணவியர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் அறிவுறுத்தப்பட்டனவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொலிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் மற்றும் சட்டத்துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதுஇறுதியாக சூழ்நிலைக் கைதியாக மாறிவிடாமல் ஒவ்வொரு பெண் குழந்தையும் சமூக அவலத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.