Home தமிழகம் தொடர் மழை பெய்ததால் சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது குடிநீர் வாரியம் தகவல்

தொடர் மழை பெய்ததால் சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது குடிநீர் வாரியம் தகவல்

4
0
SHARE

சென்னை,டிச.7& சென்னை மாநகரில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை மாநகரின் ஒரு ஆண்டுக்கான சராசரி மழை அளவு 1,200 மில்லி மீட்டராகும். இந்த மழைப்பொழிவு இரண்டு கால கட்டங்களாக பெய்கிறதுஅதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் 400 மில்லி மீட்டரும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 800 மில்லி மீட்டரும் மழை பெய்கிறது. சென்னை மாநகரில் உள்ள கிணறுகள் மூலம் மழை காலங்களில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது.

சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டத்தையும், அதன் உப்புத் தன்மையையும் மாதந்தோறும் சென்னையின் பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், 145 கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறதுசென்னை மாநகரில் மூன்று விதமான மண் வகைகள் உள்ளன. அதாவது மணல் சார்ந்த பகுதி, களிமண் சார்ந்த பகுதி மற்றும் பாறை சார்ந்த பகுதிகளாகும். இந்த மூன்று மண் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் நீர் உறிஞ்சும் தன்மை வேறுபடும்.

நிலத்தடி நீர் மட்டமானது ஆண்டுதோறும் பருவநிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியது. எனவே நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரத்தை குறிப்பிட்ட மாதத்தின் அளவை சென்ற ஆண்டின் அதே மாதத்துடன்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்ஒரு ஆண்டில் உள்ள வெவ்வேறு மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

ஏனென்றால் குறிப்பிட்ட ஆண்டில் ஜூலை மாத நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரம் அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தைவிட எப்போதும் குறைவாகவே இருக்கும்சென்னை நகரில் நவம்பர் 2016 மற்றும் நவம்பர் 2017 மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளை ஒப்பிடும்போது, தற்போது பெய்த தொடர் மழையால் சென்னை மாநகரிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்துள்ளது மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here