Home இந்தியா காலை சிற்றுண்டி ரூ.5, மதிய உணவு ரூ.10 கர்நாடகாவில் நடிகை குத்து ரம்யா பெயரில்...

காலை சிற்றுண்டி ரூ.5, மதிய உணவு ரூ.10 கர்நாடகாவில் நடிகை குத்து ரம்யா பெயரில் உணவகம்

5
0
SHARE

பெங்களூரு, டிச. 7& கர்நாடகாவில் முதல்  மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ‘‘இந்திரா கேண்டீன்’’ (இந்திரா மலிவு விலை உணவகம்) தொடங்கியது.

இந்த உணவகத்தை ராகுல்காந்தி திறந்து வைத்தார். தற்போது பெங்களூருவில் 198 மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து முன்னாள் பிரதமர் தேவிகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக ‘‘அப்பாஜி கேண்டீன்’’(அப்பாஜி மலிவு விலை உணாவகம்) திறக்கப்பட்டதுகர்நாடக மாநிலம் மண்டியாவில் நடிகையும், அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது.

ரம்யா ரசிகர் மன்ற தலைவர் ரகு தொடங்கி உள்ள இந்த உணவகம் மண்டியா&மைசூரு பிராதான சாலையில் அமைந்து உள்ளது. ரம்யாவுக்கும் இந்த உணவகத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் களமிறங்க ரம்யா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதுகுமாரி ரம்யா கேண்டீனில்’(மலிவு விலை உணவகத்தில்) காலை சிற்றுண்டி ரூ.5&க்கும், மதிய உணவு ரூ.10&க்கும் விநியோகிக்கப்படுகிறதுமலிவு விலையில் மசால் தோசை, ராகி களி, மத்தூர் வடை, இட்லி, பொங்கல் உள்ளிட்ட சுவையான உணவு வகைகள் பரிமாறப்படுவதால், ரம்யா உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here