Home சம்பவம் பிரபல இசையமைப்பாளர் ஆதித்தியன் மரணம்

பிரபல இசையமைப்பாளர் ஆதித்தியன் மரணம்

9
0
SHARE

சென்னை, டிச.7& நடிகர் கார்த்திக் நடித்த, மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்கள்அமரன்படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்தியன் (வயது 63).

இவர் சிறுநீரக கோளாறு  காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி  காலமானார். இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.பின்னர் இறுதி சடங்கு நடைபெறும். “அமரனைதொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக  கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.ஆதித்தியனின் இயற்பெயர் டைடஸ். இவருக்கு ஷோபியா என்ற மனைவியும், ஷரோன் , பிராத்தனா என்ற 2 மகள்களும் உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்ஆதித்தியன், நடிகர் கார்த்திக்கைவெத்தல போட்ட ஷோக்குலஎன்ற பாடலின் மூலம் பாடகராக அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here