Home விளையாட்டு உச்ச நீதிமன்ற தடை நீங்கியது சென்னை அணியில் மீண்டும் தோனி

உச்ச நீதிமன்ற தடை நீங்கியது சென்னை அணியில் மீண்டும் தோனி

4
0
SHARE

புதுடெல்லி, டிச.7& இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன், சென்னை அணி மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் களம் காண்கிறது.

2015&ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுத்ததுஇதனால், அந்த அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிக்காக விளையாடினர்.

இந்த நிலையில், .பி.எல் ஆட்சிமன்ற குழு நேற்று கூடியது. ஒவ்வொரு அணிகளும் முன்னணி 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளை பொறுத்த வரை புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்) தக்கவைத்து கொள்ளலாம்.

இதன்படி, தோனி சென்னை அணிக்கு திரும்புவதில் தடை ஏதும் இல்லை என்று தெளிவாகியுள்ளது. ஒவ்வொரு அணி ஏலத்திற்காக செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது2018ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here