Home இந்தியா அம்பேத்கர் நினைவு நாள் அரசு விடுமுறை ரத்து

அம்பேத்கர் நினைவு நாள் அரசு விடுமுறை ரத்து

2
0
SHARE

லக்னோ, டிச. 7& உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நினைவு நாளுக்கான அரசு விடுமுறையை ஆளும் பாஜக அரசு ரத்து செய்துள்ளது புதிய சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6ந் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு சமாஜ்வாதி அரசு இதை ரத்து செய்தது. இருப்பினும் 2015ம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியில் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மீண்டும் விடுமுறையை அறிவித்தார். தற்போது உத்தரப்பிரதேச பா..க முதல்வர் ஆதித்யநாத் இந்த விடுமுறையை ரத்து செய்துள்ளார்உத்தரப்பிரதேசத்தில் பா..க முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து அரசு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது 16வது அரசு விடுமுறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here