Home தமிழகம் நடிகை விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகை விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

29
0
SHARE

சென்னை, டிச. 7&  நடிகை விஜயசாந்தி மிதான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள சொத்து ஒன்றிற்கு அதன் உரிமையாளரிடம் இருந்து நடிகை விஜயசாந்தி பொது அதிகாரம் பெற்றிருந்தார். அதை 5.20 கோடி ரூபாய்க்கு இந்தர்சந்த்ஜெயின் என்பவருக்கு விற்பனை செய்ய ரூ.4.68 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு விற்பனை ஒப்பந்தம் போட்டுள்ளார். பின்னர், அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதுசம்பந்தமாக இந்தர்சந்த் ஜெயின் தாக்கல் செய்த புகார் மனுவை நிராகரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், உரிமையியல் சம்பந்தப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்தர்சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், இந்தர்சந்த் ஜெயின் தாக்கல் செய்த புகார் மனுவை ஏற்ற எழும்பூர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜயசாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்தர்சந்த் ஜெயின் மற்றும் விஜயசாந்தி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி முரளிதரன், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு குற்ற வழக்கை தாக்கல் செய்ய கூடாது என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது என்று கூறினார்.

உரிமையியல் தொடர்பான இந்த விவகாரம் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் தான் இந்தர் சந்த் நிவாரணம் கோரியிருக்க வேண்டும் எனக் கூறி, நடிகை விஜயசாந்தி மீதான புகாரை விசாரிக்கும்படி எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், அவருக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். ஜார்ஜ் டவுன் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்தர்சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி முரளிதரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.