Home தமிழகம் அன்னிய செலாவணி மோசடி வழக்கு; தினகரன் மனு தள்ளுபடி

அன்னிய செலாவணி மோசடி வழக்கு; தினகரன் மனு தள்ளுபடி

6
0
SHARE

சென்னை, டிச. 7& டி.டி.வி.தினகரன், கடந்த 1996&ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 331 அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாக கூறி அவர் மீது அமலாக்கத்துறையினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரை தனது தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்கள் செந்தில்வேலன், ஹேமா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கு சரியான காரணங்களை டி.டி.வி.தினகரன் தரப்பில் கூறவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here