Home சிறப்புச் செய்திகள் ம.தி.மு.க. அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன்…!

ம.தி.மு.க. அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன்…!

6
0
SHARE

சென்னை ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க,ஆதரவு தெரிவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்க,  மாஜி மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன், ம.தி.மு.க. அலுவலகம் சென்று வைகோவுக்கு செயல்தலைவர் சார்பில் நன்றி தெரிவித்தார்.ஆனால் ம.தி.மு.க, தி.மு.க வேட்பாளரை ஆதரித்ததில் பல தி.மு.க. நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லை என்று தேர்தல் செய்திகளை சொன்ன தாத்தா.அடுத்த செய்திக்கு சென்றார்.

ஒகி புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்து போய்விட்டது. ஒகி புயல் முடிந்து ஐந்து நாட்களாகியும் மின்சாரம் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணியில் அக்கறை காட்டாத கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், ஆறு மாதத்திற்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்புக்கு, மேல்முறையீடு செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

  ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை விட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மணல் மேல்முறையீட்டில் ஆர்வம் காட்டுகிறது என்று தாத்தா சொன்னவுடன், தாத்தாவைவிட இளைஞர்கள் ஆவேசப்பட்டார்கள்.தாத்தா சைகையால் அமைதிப்படுத்தினார்.

   தமிழகத்தில், ஜூன், 22ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தற்காலிக ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான தலைவர், உறுப்பினர்கள் தேர்வு முடியாததால், தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள, தற்காலிக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பதால், ரியல் எஸ்டேட் சட்டத்தை அமல்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக, சில தினங்களுக்கு முன், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்வது…?மேல் அதிகாரிகள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட வேண்டியது என்று இளைஞர்கள் பதில் சொல்ல குட் குட் என்றார் தாத்தா.

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தை பொறுத்தவரை, கட்டுமான பொறியியல், கட்டட வடிவமைப்பு, சட்டம், வீட்டுக்கடன் விவகாரங்கள் போன்றவற்றில், வல்லுனர்களாக உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பின்பற்றப்படும், ‘கேட் ஸ்கோர்’ முறையில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘கேட் ஸ்கோர்’ என்றால் பொறியியல் பட்டதாரிகள் முதுநிலை படிப்பில் சேர, மத்திய அரசும், ஐ.ஐ.டி.,க்களும் இணைந்து, ‘கேட்’ என்ற, தகுதித் தேர்வை நடத்துகின்றன.

இதில், பொறியியல் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கான அதிகாரிகள், பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நடைமுறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அடுத்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலும் பின்பற்றப்பட உள்ளது. ஆனால் இந்த முறை ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு ஒத்து வராது என்று அதிகாரிகள் வீட்டு வசதித்துறை செயலாளரிடம் கூறினார்கள்.

ஆனால் அதை செவி சாய்க்கவில்லை என்று புலம்புகிறர்கள். என்று கூறிய தாத்தா இளைஞர்களுக்கு சரி நாளை சந்திப்போம் என்று விடை கொடுத்து அனுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here