Home தலையங்கம் கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும்…! 

கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும்…! 

57
0
SHARE

முன்பெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகள் தப்புசெய்தால், அப்படி செய்யக்கூடாது… சாமி வந்து கண்ணை குத்திடும் என்றுகூறி குழந்தைகளை வளர்த்தனர். அதனால் அந்தகுழந்தைகளுக்கு சாமியிடம் பக்தியைவிட பயமே அதிகமாக இருந்தது. இதனால் கடவுளுக்கு பயந்து தப்புசெய்யாமல்வாழ்ந்தனர்.ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது.

இளம்தலைமுறையினர் வாட்ஸ் அப், பேஸ்புக் என்று கடவுளைக்கூட கிண்டல் செய்து வருகின்றனர்.அந்தக்காலத்தில் கிராமப்பகுதியில் நெல்லைஅறுவடை செய்து அதனை அளக்கும்போது முதல் மரக்கா நெல்லை கோவிலுக்கு என்றுகூறிதான் அளப்பர். அதன்பின்தான் ஒன்று,இரண்டு என்று கூறி கணக்கு வைத்துக்கொள்வார்கள்.

அந்தக்காலத்தில் அரசாண்ட ராஜராஜசோழனில் இருந்து, ராஜேந்திர சோழன் வரை கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக எழுதிவைத்தனர். இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிடுபவர்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வரியாகவோ அல்லதுவாடகையாகவோ கோவிலுக்கு கொடுத்து விடுவார்கள்.இந்த வருமானத்தைக்கொண்டு கோவிலில் பூஜைகள்செய்யவும், கோவில் திருப்பணிகளுக்கும், மற்றும் கோவிலில் ஊழியம் செய்பவர்களூக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கோவில்சொத்தை குத்தகைக்கோ, வாடகைக்கோ எடுத்தவர்கள் கோவிலுக்கு வாடகையோ, அல்லது குத்தகைத்தொகையையோதருவதில்லை.இதனால் ஒருசில கோவில்களில் ஒரு வேளை பூஜைநடத்தவும் விலக்குக்கு எண்ணை வாங்கவும் கூட பணமில்லாமல் திண்டாடும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட கோவில்களுக்கு கோவில்கடை, குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் இருந்தும் அதனை கொடுக்காமல்இழுத்தடிப்பதால்தான் கோவில்களுக்கு இந்த நிலை உள்ளது.கோவில் சொத்துக்களை விற்கக்கூடாது என்றுஅறநிலையச் சட்டம் கூறுகிறது. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்துகைப்பற்றவும் அதிகாரிகளுக்கு சட்டப்படியான அதிகாரம் உண்டு. ஆனால் இதனை யாரும் செயல்படுத்துவதில்லை.கடந்த 50 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடிமதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்க சரியான வழி கோவில்களை அரசின் நிர்வாகத்தில் இருந்து விடுவிப்பதுதான்.

இந்து சமய அறநிலையத்துறைக்குபதில்உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்கீழ் கோவில் நிர்வாகம் முழுவதையும் கொண்டு வந்தால்இனி உள்ள சொத்துக்களையாவது காப்பாற்றலாம்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.