Home தமிழகம் தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

4
0
SHARE

சென்னை, டிச. 7& போலி வாக்காளர்களை நீக்கியதாக பொய்த்தகவல் பிரச்சனையில் தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி ஒரு கோரிக்கையை முன் வைத்தார். அவர் கூறியதாவது:&

தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆர்.கே. நகர் தொகுதியில் சுமார் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களது பெயர்களை நீக்காமல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது. இந்த இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியது. இதை ஏற்றுக்கொண்டு ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போது வெளியான வாக்காளர் பட்டியலை பார்க்கும்போது போலி வாக்காளர்கள் முழுமையாக நீக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் உள்ளனர். எனவே பொய்யான தகவலை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கு தொடர உள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள் ‘இதுகுறித்து வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here