Home தமிழகம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 9 நீதிபதிகள் விரைவில் நியமனம் மத்திய அரசுக்கு உச்ச...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 9 நீதிபதிகள் விரைவில் நியமனம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

4
0
SHARE

சென்னை, டிச. 7& சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 9 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 9 புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலை?ம நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.  இந்த புதிய நீதிபதிகள் வக்கீல்கள் பிரிவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேச் ஜெனரல் சுப்பிரமணியம் பிரசாத், ஆஷா, செந்தில்குமார், இளவழகன், எமிலியாஸ், புகழேந்தி, சரவணன், ஆனந்த் வெங்கடேஷ், நிர்மல்குமார், ராமசாமி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 11 பேரை உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதில் 9 பேர் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 9 பேரின் பரிந்துரை பட்டியலை மத்திய அரசு ஆய்வு செய்து ஜனாதிபதிக்கு அனுப்பும்.

அதன் பிறகு ஜனாதிபதி புதிய நீதிபதிகள் நியமனத்திற்கான ஒப்புதலை அளிப்பார்.  இந்த 9 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படும் பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 69 ஆக உயரும்.  இந்த 11 பேர் கொண்ட பட்டியிலில் 9 பேர் யார் என்பது விரைவில் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here