Home சம்பவம் சென்னை மேடவாக்கத்தில் தூங்கிய மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தீக்காயம் அடைந்த கணவர் மருத்துவமனையில்...

சென்னை மேடவாக்கத்தில் தூங்கிய மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தீக்காயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதி

35
0
SHARE

சோழிங்கநல்லூர், டிச. 7& மனைவியை தீவைத்து கணவன் கொளுத்தியதால் மனைவிபலியானார். பலத்த தீ காயங்களுடன் கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேடவாக்கம் ராம்தாஸ் தெருவில் வசிப்பவர் ராஜேஷ் (34) இவரது மனைவி பெயர் சந்தியா (32) இவருகளுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் மதுபோதைக்கு அடிமையாகி  வேலைக்குச்செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிகடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் நேற்று இரவும் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அதிகாலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ய் ஊற்றி தீவைத்துள்ளார்.

இதில் சந்தியா சம்பவ இடத்திலியே பலியானார். இதில் ராஜேஷ¨ம் பலத்த தீகாயமடைந்தார் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பள்ளிக்கரணை  போலீசார் படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சந்தியாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை  போலீசார் சந்தியாவை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு பிறகு மண்ணெண்ய் ஊற்றி கொழுத்திருக்கலாம் என்றும் அல்லது குடிபோதையில் சந்தியாவை தீவைத்து கொளுத்தும் போது அவரும் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர் மேலும் படுகாயம் அடைந்த ராஜேஷ் மீது பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.