Home சம்பவம் வழிப்பறிக்கு எல்லை பிரிப்பதில் தகராறு தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொடூர கொலை திருவல்லிக்கேணியில்...

வழிப்பறிக்கு எல்லை பிரிப்பதில் தகராறு தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொடூர கொலை திருவல்லிக்கேணியில் பரபரப்பு  

14
0
SHARE

சென்னை, டிச, 7 சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், வழிப்பறி செய்வதில், எல்லை பிரிக்கும் தகராறில், ரவுடி தலையில் கல்லைப்போட்டு கொன்ற, நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை,  திருவல்லிக்கேணி பாரதி சாலை,  கெனால் தெரு சந்திப்பில் தலை நசுங்கிய நிலையில்,  வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நேற்று முன் தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,

அண்ணா சதுக்கம் போலீசார்,  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, விசாரணை நடத்திய பிறகு, பின்னர், வாலிபர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு, கொலை செய்யப்பட்ட நபர் குறித்து, விசாரணையை தொடங்கினர். அதில்,அவர் யார் என  அடையாளம் தெரிய வந்தது.விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் குமார்(எ) பல்பு குமார் (30) என்பது தெரிய வந்தது.  அவரை, கொலை செய்தது ஏன் என விசாரணை நடத்தினர்.

துணை கமிஷனர் பர்வேஷ் குமார் தலைமையிலான தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, பழனிவேல், ஜெகதீசன், தீபா, நசீமா உள்ளிட்டோர்  தீவிரமாக துப்பு துலக்கினர். அதில், பல்பு குமார், அதே பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கண்ணகிநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதும் தெரியவந்தது. இவருக்கும்,  பாரதி சாலை பகுதியில் உள்ள நண்பர்கள் சிலருக்கும், அடிக்கடி  பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது.  வழிப்பறி செய்வது தொடர்பாக எல்லை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலும் கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே,  பல்பு குமாரை அடித்து உதைத்து, அவரை கீழே தள்ளி, தலையில்  கல்லை தூக்கி  கொலை செய்தது தெரியவந்தது. கொல்லப்பட்ட  குமார் மீது , கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஒருவரை கைது செய்துள்ளனர்.