Home தமிழகம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒட்டு சீட்டு பயன்படுத்தப்படாது தேர்தல் அதிகாரி தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒட்டு சீட்டு பயன்படுத்தப்படாது தேர்தல் அதிகாரி தகவல்

3
0
SHARE

சென்னை, டிச.6& ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓட்டு சீட்டு வாக்குபதிவு கிடையாது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தபோது 145 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் பரிசீலனையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இப்போதுள்ள ஓட்டு சீட்டு இயந்திரங்களை பயன்படுத்து ஓட்டுப் பதிவை நடத்த முடியாது. இப்போதுள்ள ஓட்டு சீட்டு இயந்திரங்களை பயன்படுத்தி 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டோவுக்கு ஓட்டளிக்க கூடிய கட்டுப்பாட்டு இயந்திரமே தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தாலும் ஓட்டு இயந்திரத்தையே பயன்படுத்த வசதியாக 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது இ.சி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. ஆர்.கே. நகரில் 64க்கு மேற்பட்டவர்கள் களத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் பயன்படுத்துவதாக இருந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் முதலில் இடம்பெறும்.பின்னர் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர். பின்னர் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். மொத்தமுள்ள 9 பார்வையாளர்களில் ஏற்கனவே 6 பார்வையாளர்கள் வந்துவிட்டனர். நாளை ( இன்று) செலவின பார்வையாளர் வருகிறார். 7ம் தேதி இரண்டு பார்வையாளர்கள் வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 25 கம்பெனி ராணுவத்தை கேட்டோம். முதல் கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவத்தினர் 7ம் தேதி முதல் தொகுதிக்கு வரத் தொடங்குவர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனுக்கு, கட்சி வேட்பாளர் என்ற அங்கீகாரத்தையும், சின்னம் ஒதுக்க கேட்கும் பரிந்துரையையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் படிவம் ‘ஏ’, படிவம் ‘பி’ ஆகியவற்றில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட அனுமதிக்கும்படி வந்த பரிந்துரை கடிதத்தை தேர்தல் ஆணையம் நவம்பர் 30ம் தேதி ஏற்றுக்கொண்டது. முதல் முறையாக படிவங்களில் கையெழுத்திட ஒரு கட்சிக்கு இருவர் கையெழுத்திடும் நடைமுறை இதுவாகவே இருக்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் ஓட்டு கேட்க முடியும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவேண்டும். எத்தனை நபர்கள் பிரச்சாரத்தில் உடன் வருகிறார்கள் என்ற முன் அனுமதியை ஆன்லைன் மூலம் பெற வேண்டும். அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டால் அவர்கள் எத்தனை நபர்கள் வந்திருந்தாலும் அந்த செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் இடம்பெறும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் தவிர, தொப்பி சின்னமோ வேறு எந்த சின்னமோ, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தை கேட்கும் பட்சத்தில் முதலில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அந்த சின்னத்தை பெற முன்னுரிமை வழங்கப்படும். அதற்கும் போட்டி இருந்தால் குலுக்கல் முறை பின்பற்றப்படும். பதிவு செய்த கட்சிகள் கேட்காத பட்சத்தில்தான் சுயேச்சைகளுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here