Home விளையாட்டு டெல்லி டெஸ்ட்: 410 ரன்கள் இலக்கு இலங்கை திணறல்: வெற்றி முனைப்பில் இந்தியா

டெல்லி டெஸ்ட்: 410 ரன்கள் இலக்கு இலங்கை திணறல்: வெற்றி முனைப்பில் இந்தியா

1
0
SHARE

புதுடெல்லி, டிச.6& இலங்கைக்கு எதிரான டெஸ்டில், இந்தியா 410 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 31 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு என்ற பரிதாப நிலையில் உள்ளது.

இந்தியா, இலங்கை இடையிலான 3&வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததுஅதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் 3வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது.

நேற்று 4&வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனதுஇந்திய அணி தரப்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இந்த ரன்னுடன் இந்தியா 2&வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட் இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2&வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங்கை தொடங்கியதுதுவக்க ஆட்டக்காரர்களாக கருணாகரத்னே, சமரவிக்ரமா களம் இறங்கினர். சமரவிக்ரமா (5 ரன்கள்) விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். இந்த நிலையில், 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கருணாகரத்னே, ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லக்மல் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் கிளீன் போல்டு என்ற முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனால் இலங்கை 31 ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. டிசில்வா, மேத்யூஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. எஞ்சியுள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

ஒருநாள் தொடர் சண்டிமல் நீக்கம்

இந்தியா & இலங்கை இடையிலான 3&வது டெஸ்ட் முடிந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 10&ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளதுஇலங்கை அணியில் டெல்லி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கேப்டன் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here