Home தமிழகம் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு முதல்வர் ஏன் வரவில்லை? திருநாவுக்கரசர் கேள்வி

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு முதல்வர் ஏன் வரவில்லை? திருநாவுக்கரசர் கேள்வி

6
0
SHARE

குழித்துறை, டிச.6& ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு முதல்& அமைச்சர் பழனிசாமி வராதது ஏன்? என்று திருநாவுக்கரசர் கேட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று குழித்துறை வந்தார். அங்கிருந்து குருமத்தூர் பகுதியில் முறிந்து கிடந்த வாழை மரங்கள், ரப்பர் மரங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள பயிர்கள் சேதம். ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்குகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய குறைந்தது ரூ.2 லட்சம் செலவாகும். அரசு மிக குறைந்த இழப்பீடை வழங்குகிறது. இதேபோல மீனவர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆனால் கேரளாவில் ஒகி புயலால் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். கேரளாவில் அதன் மதிப்பு அதிகமாகும். தமிழகத்தில் குறைவாகவும் இருப்பதை ஏற்க முடியாது.

குமரி மாவட்ட கலெக்டருடன் இன்று காலை டெலிபோனில் பேசினேன். அப்போது அவர் 40 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் நான் பார்வையிட்ட இடங்களில் இதுவரை முறிந்து கிடந்த மின் கம்பங்கள் கூட அகற்றப்படவில்லை. பெருவாரியான இடங்களுக்கு மின்சாரம் வரவில்லை. குடிநீரும் இல்லை. பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மாவட்டமே இருளில் தவிக்கிறது. ஏராளமான வீடுகளும் இடிந்துள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் தமிழக அரசு இப்போது ரூ.25 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மிகவும் குறைவு. குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை தேசிய பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை பெற முடியும்.

குமரி மாவட்டத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பின்பும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கு ஆய்வுக்கு வராதது வருத்தமளிக்கிறது. எனவே அதிகாரிகள் தான் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஏராளமான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளதுஅவற்றை சீர் செய்யவும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்கவும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here