Home தமிழகம் மணல் தடைக்கு எதிரான செயல் கண்டிக்கத்தக்கது ராமதாஸ் அறிக்கை

மணல் தடைக்கு எதிரான செயல் கண்டிக்கத்தக்கது ராமதாஸ் அறிக்கை

7
0
SHARE

சென்னை,டிச.6& மணல் தடைக்கு எதிரான அரசின் செயல் கண்டிக்கத்தக்கது  என பா... நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கடந்த நவம்பர் 29ம் தேதி உயர்நீதிமன்றம் தமிழக நலன் கருதி அளிக்கப்பட்டத் தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஒரே ஒரு காரணம் கூட இல்லாத நிலையில், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு மேல்முறையீடு செய்திருப்பதன் நோக்கம் புரியவில்லை.  ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக எம் சாண்ட் எனப்படும் உற்பத்தி மணலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறித் தான் மணல் குவாரிகளுக்கு நீதிபதி தடை விதித்தார். மதுரையில் கடந்த மே மாதம் நடந்த அரசு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மணல் இருந்தால் தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். எனவே அடுத்த மூன்றாண்டுகளில் ஆறுகளில் மணல் எடுப்பது படிப்படியாக நிறுத்தப்படும். இதற்கு மாற்றாக செயற்கை மணலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் மணல் தட்டுப்பாட்டைப் போக்கிவிட முடியும். தமிழகத்தில் தேவையான அளவுக்கு உற்பத்தி மணல் ஆலைகளை அமைக்கவும், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரமான ஆற்று மணலை இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை செய்வதன் மூலம் இப்போது கிடைப்பதை விட குறைவான விலையில் தரமான மணல் கிடைக்கும்.  இரு திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகவும், தேர்தலில் வாக்குக்கான விலையாகவும் திகழ்வது மணல் மூலமான பணம் தான். இதை இழக்க மனமில்லாமல் தான் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளனர். இது தான் உண்மை.

எனவே, மணல் குவாரிகளை மூடப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து செய்யப்பட்டுள்ள முறையீட்டை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மணல் குவாரிகளை மூடி, இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக சட்டப் போராட்டமும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்டு வரும் பாமக இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் மூலம் ஆற்று மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக முடிவுரை எழுத சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here