Home தமிழகம் படிக்கும்போதே சம்பாதிக்க மாணவ, மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு

படிக்கும்போதே சம்பாதிக்க மாணவ, மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு

16
0
SHARE

லட்சக்கணக்கான வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும்,நிருபர்களுக்கும், ஏஜண்டுகளுக்கும் தின இதழ் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது தின இதழ் புத்தம்புதுப்பொலிவுடன் வருவதாகவும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சிகள் என்று ஒதுக்காமல் அனைத்து தரப்பினரையும்கவரும் வகையில் நடுநிலையுடன் செய்திகளை வெளியிடுவதாகவும், குறிப்பாக வி¬ளையாட்டு செய்திகள், வெளிநாட்டுசெய்திகள், வணிக செய்திகள், மற்றும் தின இதழ் சார்பில் வெளியிடப்படும் தின இதழ் ஸ்பெஷலில் வெளிவரும் கதை,கட்டுரைகள், ஆன்மிக தொடர்கள் மிகவும் அருமையாக இருப்பதாக கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தின இதழுக்குபாராட்டுகள் குவிகின்றன.

ஒரு சில மாணவ, மாணவிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘‘சார்நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறோம். எங்களுக்கு பகுதி நேரமாக தங்கள் தின இதழில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர்.இந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி.நீங்கள் தினமும் காலையில் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சமாக 2மணிநேரம் வரை மட்டும் உழைக்க தயாராக இருந்தால் மாதாமாதம் சுமார் ரூ. 2 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மக்கள் விரும்பி படிக்கும் தின இதழ்நாளிதழை வீடுவீடாக கொண்டு சென்று சேர்ப்பதுதான்.

மிகக்குறைந்த விலையில் அதாவது 3 ரூபாய்க்கு அனைத்து தரப்பு செய்திகளையும் உள்ளடக்கிய தின இதழை நீங்கள் விற்பனை செய்தால் உங்களுக்கு ஒரு பேப்பருக்கு 1 ரூபாய் கமிஷனாககிடைக்கும். ஒருமாணவர் தினமும் 50 பேப்பர் விற்றால் அவருக்கு தினமும் 50 ரூபாய் கிடைக்கும். 100 பேப்பர் விற்றால்100 ரூபாய் கிடைக்கும்.இதனால் அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து தரப்பினருடனும் உங்களுக்குஒரு அறிமுகம் கிடைக்கும்.

உங்கள் ஏரியாவில் நடைபெறும் பள்ளி விழாக்கள், கோவில் விழாக்கள், மற்றும் சங்கக்கூட்டங்கள்பற்றிய செய்திகளை நீங்கள் வாங்கி அனுப்பினால் உடனுக்குடன் பிரசுரிக்க நடவடிக்கை எடுப்போம். இதேபோல நாங்கள் தினஇதழ் ஸ்பெஷலில் வாராவாரம் வெளியிடும் எங்கள் வீட்டு மழலைகள் பகுதிக்கு உங்கள் பகுதி குழந்தைகளின் படங்களை நீங்கள் வாங்கி அனுப்பினால் இலவசமாக பிரசுரிக்க நடவடிக்கை எடுப்போம். நீங்கள் வசிக்கும் பகுதி செய்திகள் உங்கள் மூலம் தின இதழில்பிரசுரமாகும்போது  உங்களை அனைவரும் பாராட்டுவர். அதுமட்டுமல்லாமல் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும்.பிற்காலத்தில் நீங்களே பிரபலமான பத்திரிகையாளராக ஆக தின இதழ் உங்களுக்கு அடித்தளமிட்டு கொடுக்கும்.இதுமட்டுமல்லாமல் உங்கள் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள்,நகைக்கடைகள், குழந்தைகளின் பிறந்தநாள் உள்பட நீங்கள்  சின்னச்சின்னதாக விளம்பரம் வாங்கிக்கொடுத்தால்உங்களுக்கு உடனடியாக 15 சதவீதம் கமிஷன் வழங்கப்படும்.இப்படி நீங்கள் தின இதழை விடு வீடாக சென்று விற்பனை செய்தும்,விளம்பரங்கள் மூலம் கமிஷன் வாங்கியும் சம்பாதிக்கும் பணம் உங்களின் கல்விச்செலவுக்கு பேருதவியாக இருக்கும்.இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல யார் அதிக தின இதழ்பேப்பர்களை விற்கிறார்களோ அந்த மாணவர், அல்லது மாணவியையும், சிறப்பாக  விளம்பரம் வாங்கும் மாணவர்,அல்லது மாணவியை தேர்ந்தெடுத்து வருடா வருடம் நடைபெறும் தின இதழ் ஆண்டுவிழாவில் சிறப்பிக்கவும், ஊக்கப்பரிசுவழங்கவும் தின இதழின் நிறுவனருமான உயர்திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.

ஆகவே உண்மை, நேர்மை, உழைப்பு என்பதை உயிர் மூச்சாக கொண்டதுடிப்பான மாணவ, மாணவிகள் பீவீஸீணீமீtலீணீறீளீt@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற இமெயில் முகவரியிலோ அல்லது ரா.ஜெயகிருஷ்ணன் (உதவி ஆசிரியர்) செல்: 7373383604 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

இவண்,                                                   

.தயாநிதி

செய்தி ஆசிரியர்,                                                    

தினஇதழ்,                                                 

சென்னை&600087.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here