Home தமிழகம் கின்னஸ் சாதனையான ‘பரத மழை 5050’

கின்னஸ் சாதனையான ‘பரத மழை 5050’

10
0
SHARE

பூந்தமல்லி, டிச.6& ஸ்வரங்களின் சங்கமம் மற்றும் சவிதா பல்கலை கழகம் இணைந்து நடத்திய நிருத்திய நித்யாலயாவின்பரத மழை 5050 ” இந்திய மற்றும் ஆசிய அளவிலான கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா பல்கலை கழக வளாகத்தில் வெற்றிகரமாக நடந்தேறியது.

விவசாயத்திற்காகவும், நாடு செழிப்பதற்காகவும், பஞ்ச பூதங்களை வேண்டி மழைக்காக ஒரே மேடையில் 5050 பரத கலைஞர்கள் கலந்து கொண்ட மெகா பரதநாட்டிய நிகழ்ச்சி சாதனை புரிந்தது5050 பேருடன் நிகழ்த்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் 5541 பங்கேற்று  ஏகோபித்த ஆதரவை அளித்தனர்.

விழாவில் சவிதா பல்கலை கழக வேந்தர் என்.எம். வீரையன், சினிமா நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டர், நடன கலைஞர் சுதா சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் விருந்தினர்களாக பங்கேற்றனர் .

இதற்கு முன் கடந்த 14.4.2017 அன்று வேல்ஸ் பல்கலைகழகம், பல்லாவரத்தில் 4525 பேர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி சாதனையாக இருந்தது. இதனை தற்போது நடைபெற்றபரத மழை 5050″ முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்தது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டு மகிழ்ந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here