Home சினிமா நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி’

நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி’

11
0
SHARE

இமைக்கா நொடிகள்படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகின்றார்.

படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக, ஒரு கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதி  நயன்தாரா ஜோடி ஏற்கனவேநானும் ரவுடி தான்படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் ஜோடியானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடியின் மேஜிக் இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இமைக்கா  நொடிகள்படத்திற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று  தொடங்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகஇமைக்கா  நொடிகள்ஆகியுள்ளது எனக்கூறப்படுகிறது. இப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகவுள்ளது .

இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. ஜெயக்குமார் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் , புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில்இமைக்கா நொடிகள்உருவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here