Home சினிமா ‘2.ஓ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘2.ஓ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

25
0
SHARE

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், அழகு பதுமை எமி ஜாக்ஸன் நடிப்பில், மிக பிரமாண்ட முறையில் எந்திரன் 2&ம் பாகம் (2.) தயாராகி வருகிறது.

அறிவியல் தொழில் நுட்பங்களுடன், திரில்லர் மூவியாக இந்த படம் தயாராகி உள்ளது. படத்தை காண அனைத்து தரப்பு ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் ரீலிஸ் தேதி தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது. முன்னர் ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆகலாம் என கூறப்பட்டது. தற்போது படத்தின் ரீலிஸ் தேதி மேலும் தள்ளி போய் உள்ளது.

ஏப்ரல் மாதம் (2018) திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தேதி அறிவிக்கப்படவில்லை. சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக படம் அறிவிக்கப்படலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.