Home சிறப்புச் செய்திகள் இளம் வயதில் வழுக்கையா..!கவனம் தேவை

இளம் வயதில் வழுக்கையா..!கவனம் தேவை

11
0
SHARE

இளம் வயதிலேயே வழுக்கை மற்றும் வெள்ளை முடி தோன்றும் ஆண்களுக்கு, 40 வய்துக்குள்ளேயே இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 5 மடங்கு அதிகம் என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, உடல் பருமன் உள்ளவர்களுக்குத்தான் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஆய்வில் உடல் பருமன் உள்ளவர்களைவிட, வழுக்கை பிரச்சனை உள்ளவர்களுக்கே இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்து உள்ள்ளது.

இந்தியாவை சேர்ந்த இதயவியல் மருத்துவர் சச்சின் படேல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில், ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட இளைஞர்களில், இளம் வயதிலேயே வெள்ளை முடி மற்றும் வழுக்கை பிரச்சனை இருந்து, அவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதய நோய்க்கான காரணம் என்ன?

இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைபிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம்.

அந்த அளவுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. இவ்வாறு படியும் கொழுப்புகள் ‘பிளேக்ஸ்‘ என அழைக்கப்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம், இதய நோய் தொடர்பு

ரத்தக் குழாய் வழியாக ரத்தம் செல்லும் போது, அதன் பக்கவாட்டு சுவர்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதுதான் ரத்த அழுத்தமாக அளவிடப்படுகிறது. சிறிய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இடைவெளி குறுகும்போது, ரத்தத்தை உடலின் பற்ற பாகங்களுக்கு ‘பம்ப்‘ செய்ய இதயம் சிரமம்படுகிறது.

குறுகிய ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பாயும் போது அழுத்தம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் நிலையாக இருக்கும்போது, ரத்த குழாய் சுவர்கள் பலவீனமாகி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜன் காரணமாக, பெண்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனரா?

உடலில் நல்ல கொழுப்பை ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கிறது. இது பெண்களை பாதுகாக்கிறது. ஆனால், மாதவிடாய்க்குப் பின் பெண்களும், ஆண்களைப் போல் இதய பாதிப்புக்கு ஆளாகலாம். பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஈஸ்ட்ரோஜனால் ஏற்படும் நன்மையை கெடுத்து விடுகிறது.

புகைபிடித்தல்

புகை பிடிப்பதால் ரத்த குழாயின் பாதை பாதிப்படைகிறது. அதில் கொழுப்பு படிவதையும், ரத்தம் உறைவதையும் அதிகரிக்கிறது. புகையிலையில் உள்ள நிகோடின் இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மாரடைப்புக்கான அறிகுறிகள்

மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். இதோ சில:

*  நெஞ்சு வலி அல்லது அசெளகரியம் (எரிச்சல், அழுத்தம்)

*  கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் அசெளகரியம்.

*  மூச்சுத் திணறல்

*  வாந்தி

*  வியர்த்தல்

*  உடல் குளிர்ச்சியடைதல்

இதில் எந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தாலும், அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதய நோய் பாதிப்பை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சியை அதிகரித்தல், சரியான உடல் எடையை பராமரித்தல், புகைபிடிப்பதை கைவிடுதல், டென்ஷன் ஆவதை குறைத்தல் போன்றவை மூலம் இதய பாதிப்பை குறைக்கலாம்.

ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்து அதன் அளவு சரியாக உள்ளதா என கணக்கிட வேண்டும்.

ரத்த அழுத்தத்தை 6 மாதத்துக்கு ஒரு முறையும், கொழுப்பின் அளவை ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோயும், இதய நோய்க்கு முக்கிய காரணம் என்பதால், அதன் அளவையும் அடிக்கடி சோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம்.

உடல் எடையையும் சரியான அளவில் உள்ளதா என்பதை அடிக்கடி சோதிக்க வேண்டும். கூடுதல் எடை, இதயத்தின் வேலையை அதிகரித்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here