Home சுடச்சுட அடுத்த 15 நாட்களில் வெங்காயம், தக்காளி விலை குறையும் மத்திய வேளாண்துறை செயலர்...

அடுத்த 15 நாட்களில் வெங்காயம், தக்காளி விலை குறையும் மத்திய வேளாண்துறை செயலர் தகவல்

40
0
SHARE

புதுடெல்லி, டிச.5&

அடுத்த 15 நாட்களில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை குறையும் என்று மத்திய வேளாண்துறை செயலர் எஸ்.கே. பட்நாயக் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:&

நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்வு என்பது தற்காலிக பிரச்சினையாகும்.

சூழ்நிலையானது நிச்சயமாக மாறும். மராட்டிய மாநிலத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளது. இதனால் விரைவில் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கும்.

அப்போது விலை உயர்வு சரிசெய்யப்படும். இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் அதன் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைநகர் டெல்லியில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையானது ரூ.70 முதல் ரூ.80 ஆக இருக்கிறது.

இதேபோன்று பிற தலைநகரங்களிலும் வெங்காயம், தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் வெங்காயம் விலை உயர்ந்து காணப்பட்டாலும், தக்காளியின் விலை குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.