Home விளையாட்டு டெல்லி டெஸ்ட் சண்டிமல் சதத்தால், மீண்ட இலங்கை இந்தியா நெருக்கடி கொடுக்குமா?

டெல்லி டெஸ்ட் சண்டிமல் சதத்தால், மீண்ட இலங்கை இந்தியா நெருக்கடி கொடுக்குமா?

11
0
SHARE

புதுடெல்லி, டிச.5&

டெல்லி டெஸ்டில், இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல் சதத்தால் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா, இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர்.பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3&வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேத்யூஸ், சண்டிமல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினார்கள். இதனால் இலங்கையின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டிருந்தது. சண்டிமல் 145 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 76.4 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. மேத்யூஸ் 231 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சமரவிக்ரமா களம் இறங்கினார்.

தேனீர் இடைவேளையின்போது இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 98 ரன்னுடனும், சமரவிக்ரமா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் இரண்டு செசனில் இந்தியா 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றியது. இது இந்தியாவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சண்டிமல் மேலும் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய சமரவிக்ரமா 33 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சில்வா, டிக்வெல்லா ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட்டில் அஸ்வின் வெளியேற்றினார்.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சண்டிமல் சிறப்பாக விளையாடினார். லக்மலை 5 ரன்னில் மொகமது ஷமியும், காமகேயை 1 ரன்னிலும் ஜடேஜா வெளியேற்ற இலங்கை 343 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.

இதனால் இலங்கை 3வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இலங்கை 180 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் 4&வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

இதனால் இலங்கையை விரைவில் ஆல்அவுட் செய்து விட்டு, இந்தியா அதிரடியாக விளையாடி ரன்குவித்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

சண்டிமல் புகார்இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பேட் செய்து கொண்டிருக்கும் போது அசாதாரணமாக உணர்வதாக கூறினார். உடனடியாக இலங்கை அணியின் பிசியோதரபி மைதானத்திற்கு வந்து நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.

இதனால், சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. முன்னதாக நேற்றும் இலங்கை வீரர்கள், சுகாதார பிரச்சினை இருப்பதாக கூறியதால், ஆட்டம் ஏறக்குறைய 20 நிமிடம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பேட் செய்த சண்டிமால் சதம் அடித்தார். இலங்கை அணி வீரர்கள் காற்று மாசுபாடு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here