Home தமிழகம் ஆர்.கே.நகர் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு பிரசாரம் சென்னை மாநகராட்சி தகவல்

ஆர்.கே.நகர் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு பிரசாரம் சென்னை மாநகராட்சி தகவல்

10
0
SHARE

சென்னை, டிச. 5&

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மாநராட்சி¢ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் தா.கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் கம்லேஷ் குமார் பந்த், அல்கா ஸ்ரீவஸ்தவா, காவல் பார்வையாளர்கள் இம்மானுவேல் கே. முய்வா, குர்ஷீத் அகமது, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கா.விஸ்வநாதன் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பிறதுறை தேர்தல் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்தும், அவற்றை தொடர்ந்து வீடியோ மற்றும் பறக்கும் படைகள் மூலம் கண்காணிப்பது குறித்தும், வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பிற நபர்களால் இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்தும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், வாக்குப்பதிவு இடங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்தல்.

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தயார்படுத்தி, தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்கவும், அதற்கு தேவையான பொறியாளர்களை தயார்படுத்துதல் குறித்தும், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக வேட்பாளர்கள் பின்பற்றிட விளக்கிடவும், வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பராமரித்தல் குறித்தும், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது.

வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடியில் நுண்பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவினை கண்காணித்திடவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்திற்கு எடுத்துச் சென்று, வாக்குப்பதிவு நிறைவுற்றவுடன் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்படும் தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் தகவல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பிட வசதி, சாய்தள வசதி மற்றும் பிற அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும், இப்பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.அன்புச்செல்வன், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்கள், துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, எம்.கோவிந்த ராவ், எம்.விஜயலட்சுமி, மகேஸ்வரி ரவிக்குமார், டாக்டர்.சுபோத்குமார், கோபால சுந்தர ராஜ், எஸ்.பிரியதர்ஷினி, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் பிற துறை தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here