Home சுடச்சுட வேட்புமனு தாக்கல் முடிந்தது இன்று மனுக்கள் பரிசீலனை; வாபஸ் பெற 7&ந் தேதி கடைசி...

வேட்புமனு தாக்கல் முடிந்தது இன்று மனுக்கள் பரிசீலனை; வாபஸ் பெற 7&ந் தேதி கடைசி நாள்: ஆர்.கே.நகரில் 7 முனை போட்டி நடிகர் விஷால், தீபா, பா.ஜ.க. வேட்பாளர் மனு தாக்கல்

5
0
SHARE

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது. நடிகர் விஷால், தீபா, பா... வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் 7 முனை போட்டி நிலவுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை)வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க வருகிற 7&ந்தேதி கடைசி நாளாகும்.

சென்னை, டிச. 5&

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு, டிசம்பர் 5&ம் தேதி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இதைதொடர்ந்து அந்த தொகுதிக்குவருகிற 21&ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறதுஇதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம், கடந்த மாதம் 27&ம் தேதி வெளியிட்டது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பையட்டி அன்றே, வேட்பு மனு தாக்கலும் தொடங்கியது. இதற்காக தண்டையார்பேட்டை, மாநகராட்சி மண்டலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

4 சுயேட்சைகள் மனு

முதல்நாளில், தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 4 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.  ஒவ்வொரும் நாளும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிகளவில் சுயேட்சைகள் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

சனிக்கிழமைமற்றும்ஞாயிற்றுக்கிழமைவிடுமுறைஎன்பதால்மனுதாக்கல்நடைபெறவில்லை.  6 நாட்கள் வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுள்ளது. கடந்த 30&ம் தேதி வரையில் 9 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

.தி.மு.. & தி.மு..மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 1&ம் தேதி அன்று அ.தி.மு.. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.. வேட்பாளர் மருதுகணேஷ்,  சுயேட்சையாக டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை 37 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. மதுசூதனன், கூடுதலாக 3 மனுக்கள் கொடுத்துள்ளார்.   

தி.மு.. வேட்பாளர் மருது கணேஷ், கூடுதலாக ஒரு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.  வேட்பு மனு தாக்கல், செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். இதனால், கடைசி நாளில் அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

விஷால், தீபா, பா...

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா... சார்பில் கரு.நாகராஜன்,  ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா, நடிகர் விஷால் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.  விஷால், மனு தாக்கல் செய்ய தண்டையார்பேட்டை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, நடிகர் விஷால், சென்னை, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு, நேற்று காலை சென்று மரியாதை செலுத்தினார்.அதை தொடர்ந்து, மெரினா கடற்கரை வந்தார்.மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், தீபா ஆகியோர் நினைவிடத்தில், மரியாதை செலுத்தினார்.

போக்குவரத்து நெரிசல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நடிகர் விஷால் தனது ஊர்வல பயணத்தை, காசிமேடு பகுதியில் இருந்து துவக்கினார். அவர், எங்கிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார் என்ற விபரம் போலீசாருக்கு சரிவர தெரியாததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு விஷால் அங்குள்ள பகுதி மக்களிடம் திடீரென வாக்கு சேகரித்தார். அவரை பார்க்க வயதான பெண்களும் வந்து திரண்டனர்விஷாலுக்கு கை குலுக்கி உற்சாகமடைந்தனர். விஷாலும், அனைவரிடமும், சிரித்து பேசி, சகஜமாக சென்றார்

வேலியை தாண்டிய விஷால்

காசிமேடு பகுதியில் இருந்து, தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த விஷால், காரில் வராமல், அவரின் நண்பருடன், பைக்கில் வந்தார். அவரை பின் தொடர்ந்து, ஆதரவாளர்கள் வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை அருகில் வந்தபோது விஷால் மற்றும் அவரின் ஆதரவாளர்களை, அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் , சிறிது நேரம் காத்திருக்குமாறு போலீசார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து சுமார், 2 மணிக்கு மேல் விஷால், வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தனர். அப்போது, விஷால் அங்குள்ள சிறிய தடுப்பு வேலி ஏறி தாண்டி குதித்து அங்குள்ள மக்களிடம் சென்று பேசினார்.

சுயேட்சைகள் தர்ணா

வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றுதான்  கடைசி நாள் என்பதால் 50&க்கும் மேற்பட்ட சுயேட்சைகள்  வந்து விட்டனர். அவர்களுக்கு, டோக்கன் கொடுத்து வரிசைப்படி, வேட்பு மனு தாக்கல் நடந்தது. இந்த நிலையில், பா... வேட்பாளர் கரு. நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன், தமிழக பா... தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அவர்களையும் வரிசைப்படி தான் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சுயேட்சைகள் கூறி திடீர் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதே போன்று, நடிகர் விஷால், தீபா ஆகியோரும் வரிசையின்படி தான் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சுயேட்சைகள் தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் சமாதனப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் சமாதானம் ஆகாமல், தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திருந்து மனு

சுயேட்சைகளின் போராட்டத்திற்கு பிறகு நடிகர் விஷால் மற்றும்  தீபா ஆகியோர் வரிசைப்படி காத்திருந்தனர். விஷாலுக்கு, 38&வது எண்ணும், தீபாவுக்கு, 53&வது  எண்ணும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விஷால் மாலை 4.55  மணிக்கும், தீபா, 5.45 மணிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்தனர். வேட்பு மனு தாக்கல் மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் கடைசி நாள் என்பதால் அதிகம் பேர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து விட்டனர். எனவே நேரம் நீட்டிக்கப்பட்டது.

7 முனை போட்டி

வேட்பு மனு மீது பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலகுபவர்கள் தங்களின் மனுக்களை  வாபஸ் பெறுவதற்கு, வரும் 7&ம் தேதி அன்று கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.  ஆர்,கே,நகர் தொகுதியில் அ.தி.மு.. சார்பில் மதுசூதனன்,  தி.மு.. சார்பில், மருது கணேஷ், பா... சார்பில், கரு. நாகராஜன்,  நாம் தமிழர் கட்சி சார்பில், கலைக்கோட்டுதயம், சுயேச்சையாக டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால்  ஆகியோர் போட்டியிடுவதால் 7 முனை போட்டி நடைபெறுகிறது

நடிகர் விஷால், திடீர் என்று தேர்ஹ்டல் களத்தில் இறங்கியதால் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. .தி.மு.., தி.மு.. ஆகிய பெரிய கட்சிகளுக்கு , விஷால் ஒரு போட்டியாக இருப்பார்  என தெரிகிறது. 20 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள், பெண்கள் ஓட்டுகளை கணிசமாக பிரியும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால், குறைந்த ஓட்டு வித்தியாசமே , வெற்றியை தீர்மானிக்கும் என தெரிகிறது.

ஓட்டுகள் சிதறுவதால்

ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த தேர்தல்களில், .தி.மு.., தி.மு.., காங்கிரஸ் ஆகிய கட்சிகளே வென்றுள்ளன. 1977ம் ஆண்டில், ஆர்.கே.நகரை, .தி.மு.. பிடித்தது. 1980 ம் ஆண்டு, காங்கிரஸ் கைக்கு தொகுதி சென்றது. 1989 மற்றும் 1996ம் ஆண்டில்,  தி.மு.., ஆர்.கே.நகரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, ஜெயலலிதா இருந்த போது, ஆர்.கே.நகர் தொகுதியை அ.தி.மு..வின் எக்கு கோட்டையாக மாற்றினார்.2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.. தொடர்ச்சியாக கைப்பற்றியது.

சொத்து குவிப்பு  வழக்கில், விடுதலையாகி, 2015&ம் ஆண்டில், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஜெயலலிதா  வென்றார். 2016&ம் ஆண்டு பொது தேர்தலிலும், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். தற்போது, இரண்டு அணிகளாக இருந்து ஒன்றிணைந்து, இரட்டை இலையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில், மதுசூதனன் நிற்கிறார். அவரை,  தொகுதி மக்கள் நன்கு அறிவர். தீபா, டி.டி.வி.தினகரன் ஆகியோரும் போட்டியிடுவதால், .தி.மு.. ஓட்டுகள் சிதறும் என்ற நம்பிக்கையில் மருது கணேஷ் உள்ளார். விஷால் களம் இறங்கியிருப்பதால், அவர், யார் ஓட்டை பிரிப்பார் என தெரியவில்லை. இதனால், ஓட்டுகள் சிதறுவதால், இரண்டு பெரிய கட்சிகள் அச்சத்தில் உள்ளது.

வாக்குப்பதிவுஎந்திரம்வைப்பதில்சிக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அதிகளவில் சுயேட்சைகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுமார் 140&க்கும் மேற்பட்டோர், போட்டியிடுவார்கள் என தெரிகிறது. 60 பேர் இருந்தால் மட்டுமே, வாக்கு பதிவு எந்திரம் வைக்க முடியும்.  அதிகம் பேர் போட்டியிட்டால்  வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.