Home உலகம் போர்ச்சுகலில் காட்டு தீயில் சிக்கி 40 பேர் பரிதாப பலி

போர்ச்சுகலில் காட்டு தீயில் சிக்கி 40 பேர் பரிதாப பலி

14
0
SHARE

லிஸ்பன்,ஜூன்19 & ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில் உள்ள போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கு வனப் பகுதியில்  திடீரென்று காட்டுத்தீ உண்டானது.

மளமளவென பரவிய தீ காட்டில் இருந்த மரங்களை பதம் பார்த்ததுடன் காட்டின் ஓரமாக செல்லும் சாலையோரம் இருந்த மரங்களையும் பற்றியது.

இதனால் அந்த சாலை வழியாக வாகனங்களில் கடந்து சென்றவர்கள் எரிந்த நிலையில் சாலையில் விழுந்த மரங்களால் முன்பக்கமோ, பின்பக்கமோ போக முடியாமல் சாலையின் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தவாறு முன்னேறி சென்று கொண்டிருந்த நிலையில் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

அதில் வந்த நாற்பதுக்கும் அதிகமானவர்கள்  உயிரிழந்ததாகவும், பலர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவ்வழியாக பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here