Home சம்பவம் பாத்திர கம்பெனியில் பயங்கர தீ

பாத்திர கம்பெனியில் பயங்கர தீ

4
0
SHARE

சென்னை, ஜூன் 19&

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் எருக்கஞ்சேரி சாலையில் கூட்டுறவு தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. நேற்று கம்பெனிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அதிகாலை கம்பெனியின் 2வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் 4 தீயணைப்பு வண்டிகள்  விரைந்து வந்தன. சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த பாத்திரங்கள் மற்றும் அட்டை பெட்டிகள், பொருட்கள் கருகின.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here