Home சம்பவம் கோவை வந்த ரயில் அ.தி.மு.க எம்.பி.யிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

கோவை வந்த ரயில் அ.தி.மு.க எம்.பி.யிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

11
0
SHARE

கோவை, ஜூன்.19

கோவை வந்த ரயில் அ.தி.மு.க எம்.பி.யிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பவர் கோவை ஏ.கே.செல்வராஜ். இவர் கடந்த 16ம் தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டார். இதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதான பெட்டியில் ஏறினார். ரயில் அதிகாலை 5.30 மணியளவில் கோவை அருகே வந்த போது ஏ.கே.செல்வராஜ் எம்.பி வைத்திருந்த கைப்பை திடீரென மாயமானது. அதில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ரயில் கோவை வந்ததும் ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here