Home சினிமா ‘உங்களுக்கு ஆணையிடும் சக்தி வந்து விட்டது’ கமல் பாராட்டிய பத்திரிகையாளர்

‘உங்களுக்கு ஆணையிடும் சக்தி வந்து விட்டது’ கமல் பாராட்டிய பத்திரிகையாளர்

9
0
SHARE

நடிகர் கமலஹாசன் தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்ததோடு தனது கண்களையும் தானம் செய்திருக்கிறார். இந்த தானத்துக்காக மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் தேவராஜ் தனது உடலை தானம் செய்ததோடு கண்களையும் தானம் செய்தார்.

இந்த தகவல் கமலஹாசனுக்கு தெரியவந்து தேவராஜை சந்திக்க விரும்பியிருக்கிறார். அவரை குடும்பத்தோடு தனது அலுவலகத்திற்கு வரவழைத்த அவர் தேவராஜிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

அதோடு ”இப்போதிலிருந்து உங்களுக்கு ஆணையிடும் தகுதி வந்து விட்டது என்று கூறி உடல்தானம் செய்த சிலரை பற்றியும் கூறியிருக்கிறார். இதற்கு முன் பத்திரிகையாளர் மேஜர்தாஸன் உடல்தானம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் லட்சம் பேர் வசித்தாலும் வெறும்  ஆயிரத்து ஐநூறுக்கும் குறைவானவர்களே உடல்தானம் செய்திருக்கிறார்கள் என்று கமல் தனது கவலையையும் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here