Home அரசியல் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் ...

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் பரிந்துரை

5
0
SHARE

சென்னை, ஜூன் 19& ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தது. சசிகலா அணி சார்பில் தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் விஜயபாஸ்கரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் அளவில் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும், ஆர்.கே.நகர் மக்களின் வாக்காளர் பட்டியலும் சிக்கியது. மேலும் பணப்பட்டுவாடா செய்ததற்காக விஜயபாஸ்கர் அறையில் சிக்கிய ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பெயரும் இருந்தது  பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி ஏப்ரல் 9ம் தேதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்குச் சில கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு அளித்துள்ள பதிலில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதுஎன்று தெரிவித்துள்ளது.

எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று ஜூன் 19ம் தேதி வரவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here