Home இந்தியா மறைந்த டெல்லி முதல்வர் பிரம்ம பிரகாஷ்  நினைவு தினம் 

மறைந்த டெல்லி முதல்வர் பிரம்ம பிரகாஷ்  நினைவு தினம் 

7
0
SHARE

டெல்லிஜூன்18 & மறைந்த டெல்லி முதல்வர் சவுத்ரிபிரம்மபிரகாஷின் நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கு முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி  சிவகுப்பு மாநிலமாக இருந்த போது முதல்வராக இருந்தவர் சவுத்ரி பிரம்ம பிரகாஷ். இவர் கடந்த 1952 ல் முதல்வராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியை வகித்தார். அவரை தொடர்ந்து குர்முக் நிகால் சிங் என்பவர் 1955ம்  ஆண்டில் முதல்வரானார். இதன் பின்னர் டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டு டெல்லி மெட்ரோபாலிட்டன் கவுன்சில் உருவாக்கப்பட்டது.பிரம்ம பிரகாஷ் 1993ம் ஆண்டு இறந்தார். அதே ஆண்டில் மீண்டும் டெல்லி சட்டசபை உருவாக்கப்பட்டது. மறைந்த சவுத்ரி பிரம்ம பிரகாஷின் நினைவு தின நிகழ்ச்சியில் டெல்லியில் உள்ள பழைய சட்டசபை வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பிராந்திய வளர்ச்சிக்கு பாடுபட்டவர் பிரம்ம பிரகாஷ்.டெல்லி மாநிலத்துக்கு  அருகில் உள்ள பகுதிகளை இணைத்து கிரேட்டர் டெல்லியை உருவாக்க பாடுபட்டார்.அதே போல் முழு அதிகாரங்களுடன் கூடிய டெல்லி மாநிலம் உருவாக வேண்டும் என்பதற்காக அவர் கடைசிவரை கடுமையாக பாடுபட்டார். சவுத்ரி பிரம்ம பிரகாஷின் கனவை நனவாக்க ஆம் ஆத்மி கட்சி போராடும் என்றார்.இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அடுத்த ஆண்டு பிரம்ம பிரகாஷின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சட்டசபை துணை சபாநாயகர் வந்தனா குமாரி, சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்,பிரம்ம பிரகாஷின் மகன் சுரேஷ் சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here