Home சம்பவம் தீவிரமடைகிறது கூர்க்காலாந்து போராட்டம் டார்ஜிலிங்கில் கலவரம் வெடித்தது துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

தீவிரமடைகிறது கூர்க்காலாந்து போராட்டம் டார்ஜிலிங்கில் கலவரம் வெடித்தது துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

9
0
SHARE

டார்ஜிலிங்ஜூன்18 & மேற்கு வங்கத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மூத்தத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வீடு திரிண£முல் காங்கிரஸ் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

பாதுகாப்புப்படையினரும், போலீசாரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அமைதியை நிலைநாட்ட ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

வங்கமொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிமாநிலம் கேட்டு போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பிஜோன்பரி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து நாரியா மோர்ச்சா என்ற மூத்தத் தலைவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியும், பாட்டில்களை எரிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை வாகனம் ஒன்றும் தீ வைத்துக் எரிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர். பாதுகாப்புப் படையினர் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சூழ்நிலையை கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா செய்தி ஊடகக் குழுவின் தலைவர் அமீர் ராய் என்பவரின் மகனும், செய்தியாளருமான விக்ரம் ராய் என்பவர் நேற்று நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீடு நள்ளிரவு நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் சீர்குலைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்ததாகத் தெரிகிறது.இந்நிலையில் டார்ஜீலிங் நகரில் உச்சகட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று,இருதரப்பு மோதலில் கூர்க்கா ஜன்முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த ரிசர்வ் படை போலீஸ்காரர் கிரண் தமாங் சிலிகுரி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here