Home இந்தியா ஜனாதிபதி வேட்பாளர் யார்? கட்சிகளுடன் பாஜ தீவிர ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்? கட்சிகளுடன் பாஜ தீவிர ஆலோசனை

6
0
SHARE

புதுடெல்லி, ஜூன் 18& குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்று கட்சிகளுடன் பாஜக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24ந் தேதியுடன் முடிவடைகிறது.

புதியஜனாதிபதியைதேர்ந்தெடுக்கஜூலை 17ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 14ந் தேதி தொடங்கியது. வருகிற 28ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று அனைத்து கட்சிகளும் தலையை பிய்த்துக்கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். அந்தந்த கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பிரதமர் மோடியின் விருப்பமாக உள்ளது. எனவே பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவர் குழு ஒன்றை பாஜக தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார். அந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள்காங்கிரஸ்தலைவர்சோனியாகாந்தி,மார்க்சிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொதுவேட்பாளரை நிறுத்துவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அந்தந்த கட்சி சார்பில் தங்கள் கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று பேசி வருகின்றனர். அதன்படி ஆளும் கட்சியான பா... சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜார்க்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தனது ஆதரவை அளிப்பது என்று தெரிவித்திருக்கிறார்.

சுஷ்மாஸ்வராஜ் மறுப்பு

பா... சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறிவந்தன. இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் நான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என்ற தகவல் வதந்தி. நான் இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ளேன். நீங்கள் உள் விஷயம் என்னவென்று கேட்கிறீர்கள் என்று பதிலளித்துள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்படும் என பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here