Home இந்தியா காஷ்மீரில் பயங்கரம் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி

காஷ்மீரில் பயங்கரம் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி

11
0
SHARE

ஸ்ரீநகர்ஜூன்18 & ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, 6 போலீசாரை சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களின் முகங்களை சிதைத்து, ஆயுதங்களுடன் தப்பியோடிவிட்டனர். இவர்களில் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். வீரமரணமடைந்த போலீசாரின் உடலுக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டத்தில் தஹாஜிவாரா என்ற பகுதியில் உள்ள போலீஸ் முகாம் மீது லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீரமரணமடைந்த போலீசாரின் முகங்களை தீவிரவாதிகள் சிதைத்துவிட்டு, ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு தப்பியோடினர். வீரமரணமடைந்த போலீசாரில் காவல்நிலைய அதிகாரியும் ஒருவராவார். இந்த தாக்குதலில் பொதுமக்களில் 2 பேரும் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு கூடுதல் போலீசார் மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய தீவிரவாதிகளில் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று, அவர்களிடம் இருந்த 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், வீரமரணம் அடைந்த 6 காவலர்களின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here