Home சம்பவம் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் 

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் 

9
0
SHARE

படப்பை, ஜூன் 18&

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகன் முருகன்(43), இவர் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் & வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முருகன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது காரில் இருந்து திமுதிமுவென இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் முருகனை பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு அதே காரில் வேக வேகமாக தப்பிச் சென்றனர்.

இதில் முருகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த ஒட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி படுகொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ட பகலில் ஓட்டேரி போலீஸ் நிலையம் அருகே நடுரோட்டில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மண்ணிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து மண்ணிவாக்கம் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here